ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகிபாபு நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான கோமாளி திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்கியதன் மூலம் இளம் வயதிலேயே அறிமுக இயக்குனராக பெயர் எடுத்தார் பிரதீப் ரங்கநாதன்.
இதைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தை இயக்குவதற்கு சற்று காலதாமதம் செய்து வந்த பிரதீப் ரங்கநாதன் தற்போது தானே ஹீரோவாக நடிக்கும் வகையில் ஒரு கதையை உருவாக்கி அந்த படத்தை இயக்கி நடித்துள்ளார். படத்திற்கு லவ் டுடே என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த கதையை கேட்டதுமே படத்தை இயக்குவதற்கு மட்டுமல்ல, இவர் ஹீரோவாக நடிப்பதற்கும் சேர்த்து ஒப்புக்கொண்டு இதை தயாரித்துள்ளது பிரபலமான ஏஜிஎஸ் நிறுவனம். இந்த படம் வரும் நவம்பர் 4ம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த படம் குறித்து சில தகவல்களை ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டபோது நடிகர் விஜயை சந்தித்தது குறித்தும் பிரதீப் அரங்கநாதன் கூறியுள்ளார்.
அந்த பேட்டியில் அவர் கூறும்போது, “இந்த விஷயத்தை சொல்லலாமா வேண்டாமா என தெரியவில்லை. கோமாளி படம் முடிந்த பிறகு விஜய் சாரை சந்தித்தபோது அவரிடம் ஒரு கதையின் அவுட்லைனை கூறினேன். அந்த கதையின் மையக்கரு விஜய் சாருக்கு ரொம்பவே பிடித்திருந்தது.
எதிர்காலத்தில் விஜய் சாரை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு வந்தால் நிச்சயம் அதை பயன்படுத்திக்கொள்வேன் என்று கூறியுள்ளார் பிரதீப் ரங்கநாதன். தற்போது இவர் நடித்து வெளியாகவுள்ள படத்திற்கு விஜய் நடிப்பில் 25 வருடங்களுக்கு முன்பு வெளியான லவ்டுடே படத்தின் தலைப்பைத்தான் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.