சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முத்து திரைப்படம் தான் முதன் முதலில் ஜப்பானில் திரையிடப்பட்ட தமிழ் படம் .அந்த படம் அங்கே மிகப்பெரிய வெற்றி பெற்று ஜப்பானில் முதன்முதலாக ஒரு இந்திய நடிகருக்கு, ரசிகர் மன்றம் உருவாக்கப்பட்டது என்றால், அது நம் தமிழ் சினிமாவுக்கு, அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மட்டும்தான்.

அப்போது இருந்து இப்போது வரை சூப்பர் ஸ்டார் ரஜினி படங்கள் வெளியாகும் போதெல்லாம் ஜப்பான் ரசிகர்கள் அதை மிகப்பெரிய கொண்டாட்டமாக கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் ஜப்பான் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சொல்லப்போனால் அதற்கு அடுத்து முன்னும் பின்னும் சில படங்கள் ஜப்பானில் வெளியாகி இருந்தாலும் முத்துவுக்கு அடுத்தபடியாக வசூல் ரீதியாக இரண்டாம் இடத்தில் இருப்பது பாகுபலி திரைப்படம் தான்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்புராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் தற்போது ஜப்பானில் வெளியாகிறது.

இந்தப் படத்திற்கும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு மற்றும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த வகையில் இந்த படம் முத்து மற்றும் பாகுபலி சாதனைகளை தாண்டுமா என்பது விரைவில் தெரிந்து விடும்.