கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழில் வெளியான நேரம், ராஜா ராணி, நய்யாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள நடிகை நஸ்ரியா.
சினிமாவில் பிஸியாக இருக்கும்போதே நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆன நஸ்ரியா அதன் பிறகு நடிப்புக்கு இடைவெளி விட்டு இருந்தார்.
தற்போது கடந்த இரண்டு வருடமாக செலக்டிவாக சில படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமன்றி சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருந்துவருகிறார்.
தற்போது தனது கணவருடன் துபாயில் சுற்றுலா மேற்கொண்டு வருகிறார் நஸ்ரியா. அப்போது அங்கே ஸ்கை டைவிங் சாகசம் செய்து வாழ்நாள் கனவை நிறைவேற்றியுள்ளார் நஸ்ரியா.
மேலும் இந்த புகைப்படங்களில் அவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ளார்