தமிழ் திரையுலகில் ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளிக்கும் விதமாக நல்ல கதையம்சத்துடன் முழுமையான பொழுதுபோக்கு படங்களை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக தயாரித்து வருபவர் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார்.

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான சிங்கம்-2 படத்தை தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் படங்களின் மீது இயல்பாகவே ஒரு எதிர்பார்ப்பு உருவாகி விட்டது. தொடர்ந்து கார்த்தி நடித்த தேவ், திரிஷா கதையின் நாயகியாக நடித்த மோகினி ஆகிய படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸின் அடுத்த வெளியீடாக தீபாவளி பண்டிகை கொண்டாட்டமாக வரும் அக்-21ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் சர்தார்.

இரும்புத்திரை புகழ் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள இந்தப்படம் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் இந்தியன் ஸ்பை த்ரில்லராக உருவாகியுள்ளது.
கதாநாயகிகளாக ராசி கண்ணா, ரஜிஷா விஜயன் நடிக்க, முக்கிய வேடத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கன்னக்குழி அழகி நடிகை லைலா நடித்துள்ளார்.

சங்கி பாண்டே, முரளி சர்மா, முனீஸ்காந்த், யூகி சேது, இளவரசு,மைனா நந்தினி மற்றும் பலர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்தின் படத்தொகுப்பை ரூபன் மேற்கொண்டுள்ளார்.
சிறுத்தை, காஷ்மோரா படங்களை தொடர்ந்து கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் என்பதும் அதில் இந்திய உளவாளியாகவும் போலீஸ் அதிகாரியாகவும் அதேசமயம் தந்தை மகன் என்கிற கதாபாத்திரங்களில் நடித்துள்ளதும் என நிச்சயம் இந்தப்படம் ரசிகர்களுக்கான நிஜமான தீபவளி விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை..

இந்தப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே சர்தார் படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியதால் அதற்கேற்றபடி இந்தப்படத்திற்கான வியாபாரம் மிகப்பெரிய அளவில் நடைபெற்றுள்ளது. குறிப்பாக அதிக அளவிலான திரையரங்குகள் இந்தப்படத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் தீபாவளி ரேஸில் சர்தார் முன்னிலையில் இருக்கிறது.

சர்தார் படத்தை தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸின் தயாரிப்பில் சசிகுமார் நடிக்கும் காரி மற்றும் தண்டட்டி ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. மேலும் சில முன்னணி ஹீரோக்கள் மற்றும் முன்னணி இயக்குநர்களுடன் கோர்த்து மிக பிரமாண்டமான படங்களை தயாரிக்கும் முயற்சியிலும் பிரின்ஸ் பிக்சர்ஸ் இறங்கியுள்ளது.
தொடர்ந்து தரமான படங்களை தயாரிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு தனி முத்திரை பதிக்கும் நிறுவனமாக பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தனக்கென ஒரு பாதையை உருவாக்கியுள்ளது.