இயக்குனர் ஷங்கரின் பாய்ஸ் படத்தில் கதாநாயகர்களில் ஒருவராக அறிமுகமானவர் பரத். அதைத்தொடர்ந்து காதல், வெயில், எம் மகன் என பல ஹிட் படங்களை கொடுத்தவர், இடையில் சில நாட்கள் திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்தார் என்றே சொல்லவேண்டும்.

இதை தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களாக மீண்டும் படங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். அவர் நடிப்பில் வெளியான காளிதாஸ் திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்றது.

இந்த நிலையில் பரத் நடித்துள்ள மிரள் திரைப்படம் வரும் நவம்பர் 11ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை சக்திவேல் என்பவர் இயக்கியுள்ளார். படத்தின் கதாநாயகியாக வாணி போஜன் நடித்துள்ளார்.

ராட்சசன் படத்தை தயாரித்த டில்லிபாபு இந்த படத்தை தயாரித்துள்ளார் கேஎஸ் ரவிக்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை சக்தி பிலிம் ஃபேக்டரி தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப இந்த மிரள் திரைப்படம் ரசிகர்களை மிரள வைக்குமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.