தமிழ் சினிமாவில் கலை இயக்குனர்களின் குறிப்பிடத்தக்கவராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கலை இயக்குனர் கிரண். காரணம் இவர் நடிகராகவும் தன்னை ரசிகர்களிடம் அடையாளப்படுத்தி கொண்டவர். பல படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து பல முன்னணி நடிகர்கள் இயக்குனர்களின் படங்களுக்கு கலை வடிவமைப்பை செய்துவரும் கிரண், தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்திற்கும் கலை வடிவமைப்பை செய்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது “பல வருட கனவு.. நீங்கள் ரொம்ப இனிமையானவர் சார்.. கடந்த இரண்டு நாட்களாக உங்கள் குரலை கேட்கிறேன்” என்று சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றி கூறியுள்ளார்.

அது மட்டுமல்ல, “எனது அன்புக்குரிய நெல்சன் டார்லிங் உன்னால் மட்டுமே இது நடந்தது” என்று நெல்சனுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார் கிரண்.