V4UMEDIA
HomeNewsKollywoodகார்களின் ஹாரன் ஒலிகளை மட்டுமே வைத்து இசைக்கப்பட்ட அனிருத்தின் ‘டிப்பம்  டப்பம்’

கார்களின் ஹாரன் ஒலிகளை மட்டுமே வைத்து இசைக்கப்பட்ட அனிருத்தின் ‘டிப்பம்  டப்பம்’

சென்னையில் நடைபெற்ற அனிருத்தின் முதல் பிரமாண்ட இசை நிகழ்ச்சி அக்டோபர் 21 ஆம் தேதி இரவு 8 மணிக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

சென்னையில் இந்நிகழ்வுக்கு முன் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இந்த இசை நிகழ்வை தனித்துவமான வழிகளில் விளம்பரங்கள் செய்து, ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலில் ராக்ஸ்டார் அனிருத்தின் பல்வேறு விதமான படங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ரயிலில் பயணித்த ரசிகர்கள் ‘ராக்ஸ்டார் ஆன் ஹாட்ஸ்டார்’ இசை நிகழ்ச்சியின் விளம்பரங்களுடன் செல்ஃபி எடுத்து கொண்டாடினர்.

சென்னையில் உள்ள மெரினா மாலில் கார்களின் ஹாரன் ஒலிகளை மட்டுமே கொண்டு இசைக்கப்பட்ட அனிருத்தின் “டிப்பம்  டப்பம்“ பாடல் அங்கிருந்த அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. கார் ஹாரன் ஒலியில் இசைக்கப்பட்ட பாடலைக் கேட்டு அங்கு வந்திருந்த ரசிகர்கள், தம்பதிகள் மற்றும் குடும்பத்தினர் என அனைத்து பார்வையாளர்கள் பாடியும், விசில் அடித்தும் ஆரவாரம் செய்தனர்

Most Popular

Recent Comments