நடிகர் தனுஷ் மற்றும் விஜய் இவர்கள் இருவரும் தெலுங்கு சினிமாவில் முதன் முதலாக அடி எடுத்து வைத்து நடித்து வருகின்றனர். தனுஷ் வாத்தி என்கிற படத்திலும் விஜய் வாரிசு என்கிற படத்திலும் நடித்து வருகின்றனர். இவர்களை தொடர்ந்து சிவகார்த்திகேயனும் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டார். இந்த படம் தீபாவளி ரிலீசாக வரும் 21ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

தெலுங்கு இயக்குனரான அனுதீப் என்பவர் இந்த படத்தை இயக்கி உள்ளதால் இந்த படம் நேரடியாக தெலுங்கிற்கு ஏற்றமாதிரி எடுக்கப்பட்டுள்ளது என்றும் தமிழ் ரசிகர்களுக்காக தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு உருவாகிறது என்றும் ஒரு பேச்சு பல நாட்களாகவே ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் சமீபத்திய பத்திரிக்கையாளர்கள் கேள்விகளுக்கு சிவகார்த்திகேயன் பதிலளித்த போது இந்த படம் தெலுங்கில் உருவாகவில்லை இது தமிழ் படம் தான் என்று அதிரடி தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தின் இயக்குனர் தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர் என்பதால் அப்படி ஒரு தோற்றம் இந்த படத்தை பற்றி உருவாகிவிட்டது. மற்றபடி இந்த படம் தமிழுக்காக எழுதப்பட்ட கதைதான். தமிழகத்தில் எடுக்கப்பட்ட படம்தான் என்று கூறி பலருக்கு இருந்த சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சிவகார்த்திகேயன்.