நடிகை ஜோதிகா நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு குறிப்பிட்ட காலம் வரை சினிமாவில் இருந்து ஒதுங்கி தனது குடும்பத்திற்காகவும் குழந்தைகளுக்காகவும் நேரத்தை ஒதுக்கினார்.
இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு 36 வயதினிலே என்கிற படம் மூலம் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்த ஜோதிகா நல்ல கதையம்சம் கொண்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களாக தேர்ந்தெடுத்து செலக்டிவ் ஆக நடித்து வருகிறார்.
அந்த வகையில் தமிழில் மட்டும் நடித்து வந்தவர் தற்போது மலையாளத்திலும் பிரவேசித்து மம்முட்டியின் ஜோடியாக காதல் ; தி கோர் என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில் நடிப்பதன் மூலம் 22 வருடம் கழித்து மீண்டும் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார் ஜோதிகா.
இந்த படத்தை மலையாள இயக்குனர் ஜியோ பேபி என்பவர் இயக்குகிறார். இவர் கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி, ரசிகர்களின் வியாம்ர்சகர்களின் குறிப்பாக பெண்களின் பாராட்டுக்கு ஆளான தி கிரேட் இண்டியன் கிச்சன் என்கிற படத்தை இயக்கியவர்.
இந்தப் படம் கூட தற்போது ஆர் கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அதே பெயரில் தமிழில் தயாராகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.