V4UMEDIA
HomeNewsKollywoodதிருப்பூர் சப் கலெக்டராக பொறுப்பேற்ற நடிகர் சின்னிஜெயந்த் மகன்

திருப்பூர் சப் கலெக்டராக பொறுப்பேற்ற நடிகர் சின்னிஜெயந்த் மகன்

திரையுலகில் எப்போதாவது நிகழக்கூடிய அதிசயம் ஒன்று தற்போது நிகழ்ந்துள்ளது. அப்படி நிகழ்த்தியவர் நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்த்தின் மகன் ஸ்ருதன் ஜெயன் நாராயணன்.

பொதுவாகவே சினிமாவை பொருத்தவரை நடிகர்களாக, நடிகைகளாக, இயக்குனர்களாக இருப்பவர்களின் வாரிசுகளில் 90% பேருக்கு மேல் தங்களது பெற்றோர்களை போன்றே திரையுலகில் விருப்பப்பட்டு நுழைகின்றனர். இன்னும் சிலர் தங்களது பெற்றோர்களின் வற்புறுத்தலுக்காக திரையுலகில் நுழைந்து நடிகர், நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர் என ஏதோ ஒரு துறையை தேர்ந்தெடுத்து கொள்கின்றனர்.

ஆனால் நடிகர் சின்னிஜெயந்த் தனது மகனை படிப்பில் ஆர்வம் செலுத்த வைத்து, ஐஏஎஸ் தேர்வு எழுத ஊக்கமளித்து, இன்று உயரிய அரசு பதவியான துணை ஆட்சியர் பதவிக்கு இந்த இளம் வயதிலேயே அவரை கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்.

தற்போது அவருக்கு திருப்பூர் மாவட்டத்தில் சப் கலெக்டராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திருப்பூரில் பொறுப்பேற்றுக்கொண்ட பின்பு சில சின்னி ஜெயந்தியின் மகன் கூறும்போது திருப்பூர் பகுதி பொதுமக்கள் தொழில்துறை நலனுக்காக மற்ற உயர் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவேன் என்று கூறியுள்ளார்..

Most Popular

Recent Comments