யோகிபாபு பொருத்தவரை பிஸியான நகைச்சுவை நடிகராக நடித்து வந்தாலும் அவ்வப்போது நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் கதையின் நாயகனாகவும் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடிக்க தயங்குவதில்லை. அந்தவகையில் கடந்த வருடம் வெளியான மண்டேலா படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் யோகிபாபு.

அறிமுக இயக்குனர் அஸ்வின் இயக்கியிருந்த இந்தபடத்தில் கிராமத்தில் முடிதிருத்தும் தொழில் செய்யும் தொழிலாளியான யோகிபாபு, தனக்கென ஒரு நிரந்தரமான முகவரி தேடுவதையும் அதை மையமாக வைத்து அவரை சுற்றி பின்னப்படும் அரசியல் வலையையும் பற்றி இந்தப்படம் நகைச்சுவை நையாண்டி கலந்து உருவாகியிருந்தது.

ரசிகர்களும் விமர்சகர்களும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பை அளித்தனர். இந்த நிலையில் சமீபத்தில் வழங்கப்பட்ட 61வது தேசிய விருதுகள் நிகழ்வில் இந்த படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குனர் மற்றும் வசனகர்த்தா பிரிவில் இயக்குனர் மடோன் அஸ்வின் தேசிய விருதைப் பெற்றார்.

இதைத்தொடர்ந்து தற்போது நடிகர் யோகிபாபு நேரில் சந்தித்த வாழ்த்துக்களை பெற்றுக் கொண்ட மடோன் அஸ்வின் அரசின் தேசிய விருது பதக்கத்தை யோகிபாபுவுக்கு அணிவித்து அழகு பார்த்தார்.

இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.