V4UMEDIA
HomeNewsKollywoodகீர்த்தி சுரேஷின் பிறந்தநாளில் வெளியான தசரா போஸ்டர்

கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளில் வெளியான தசரா போஸ்டர்

நடிக்க வந்த மிகக் குறுகிய காலகட்டத்திலேயே அதிலும் இளம் வயதிலேயே தேசிய விருது பெற்ற நடிகைகள் மிகச்சிலரே. மகாநடி படத்தில் சாவித்திரியாக நடித்து பாராட்டுக்களைப் பெற்று அந்த பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொண்டார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இந்த நிலையில் தற்போது தெலுங்கு இளம் முன்னணி நடிகர் நானிக்கு ஜோடியாக தசரா என்கிற படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். கதாசிரியர் ஶ்ரீகாந்த ஒதெலா இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இன்று கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் கதாபாத்திர போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் வெண்ணிலா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நட்சத்திரமாக ஜொலிக்கும் மஞ்சள் நிற புடவையில்  கீர்த்தி சுரேஷ் கிராமத்து பெண் தோற்றத்தில் கலக்கலாக இருக்கிறார்.  

அதுமட்டுமல்ல கதாநாயகி தான் என்று இல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடிக்க விரும்பும் கீர்த்தி சுரேஷ், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு தங்கையாக அண்ணாத்த படத்தில் நடித்தார்.

அதேபோல தற்போது அஜித் நடித்த விவேகம் படம் தெலுங்கில் போலா சங்கர் என்கிற பெயரில் ரீமேக் ஆகி வரும் நிலையில் அதில் நாயகன் சிரஞ்சீவியின் தங்கையாக லட்சுமி மேனன் நடித்த கதாபாத்திரத்திலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

போலா சங்கர் படக்குழுவினரும் கீர்த்தி சுரேஷ் பிறந்தநாள் பரிசாக தங்களது பட குழுவினர் சார்பாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Most Popular

Recent Comments