இயக்குனர் வெங்கட் பிரபு மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது முதன்முறையாக தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைத்து இளம் நடிகர் நாகசைதன்யா நடித்துவரும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக கிரிதி ஷெட்டி நடிக்கிறார்.
இந்த நிலையில் தமிழில் இருந்தும் சில முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.
அதில் குறிப்பாக 90களில் கதாநாயகிகளாக கோலோச்சிய, தற்போது குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகர்களாக வலம் வரும் சரத்குமார் மற்றும் அரவிந்த்சாமி இருவரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.
அதுமட்டுமல்ல பருத்திவீரன் படம் மூலம் தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணியும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் வெங்கட்பிரபுவின் தம்பி நடிகர் பிரேம்ஜி இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார்.
இவர்கள் தவிர தெலுங்கு திரையுலகின் நகைச்சுவை நடிகரான வெண்ணிலா கிஷோர், நடிகர் சம்பத் உள்ளிட்ட நடிகர்களும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.