மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெறும் ஒருசில படங்கள் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியிலும் கூட ரீமேக்காகி வெற்றி பெறுவது எப்போதாவது நிகழும் ஒரு விஷயம். இந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் ஹெலன்.
ஒரு ஷாப்பிங் மாலில் உள்ள வணிக நிறுவனம் ஒன்றில் குளிர்பதன அறையில் மாட்டிக்கொள்ளும் இளம்பெண் அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை மையப்படுத்தி உணர்வுபூர்வமாக உருவாக்கப்பட்டிருந்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதைத் தொடர்ந்து கடந்த வருடம் இந்த படம் தமிழில் அருண்பாண்டியன் மற்றும் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் அன்பிற்கினியாள் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி ஓரளவு வரவேற்பும் பெற்றது.

இந்த நிலையில் இதே படம் தற்போது தெலுங்கில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிப்பில் மிலி என்கிற பெயரில் உருவாகி உள்ளது.

தயாரிப்பாளர் போனி கபூரே தனது மகள் நடித்துள்ள இந்த படத்தை தயாரித்துள்ளார். வரும் நவம்பர் 4-ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது.
மலையாளத்தில் பெற்றது போன்ற ஒரு மிகப்பெரிய வெற்றியை இந்தப் படம் இந்தியில் ஜான்வி கபூர் பெற்றுத் தருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்