தமிழ்சினிமாவில் 25 வருடங்களை தொட்டுவிட்ட இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு ஒரு சாதனையை பரிசளிக்கும் விதமாக, விரைவில் டிவி சேனல் ஆக மாறியிருக்கும் பிளாக் ஷீப் யூடியூப் சேனல், எஸ்என்எஸ் என்கிற நிறுவனத்துடன் இணைந்து யுவன் சங்கர் ராஜாவை விழாவிற்கு அழைத்து அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளித்து உள்ளனர்.

அதாவது தனுஷ் சாய்பல்லவி நடிப்பில் வெளியான மாரி-2 படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ரவுடி பேபி என்கிற பாடல் பல மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு மிகப்பெரிய சாதனையை படைத்தது.

அந்தப்பாடலை யுவன் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இந்தப் பாடலை ஒலிக்கவிட்டு கிட்டத்தட்ட 11 ஆயிரம் மாணவர்கள் ஒரே சமயத்தில் ஆடிப்பாடி சாதனை படைத்துள்ளனர்.

இது இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் வேர்ல்டு புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனங்களால் உலக சாதனையாக உடனடியாக அங்கீகரிக்கப்பட்டது.

அதுமட்டுமல்ல பிளாக் ஷீப் டிவியின் விளம்பரங்களுக்கான பிராண்ட் அம்பாசிடராகியுள்ளார் வைகைப்புயல் வடிவேலு. இதைத் தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்வில் ஒரு டீசரும் வெளியிடப்பட்டது. வடிவேலு பிராண்ட் அம்பாசிடராக விளம்பரத்தில் களமிறங்குவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.