மஞ்சுவாரியர் நடித்துள்ள ஆயிஷா திரைப்படம் இந்திய மற்றும் அரபு நாடுகளின் கூட்டுத் தயாரிப்பாக உருவாகி உள்ளது.. இந்தப் படத்தில் 70 சதவீதம், இந்தியாவிற்கு வெளியேயுள்ள பிற நாட்டை சேர்ந்த கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள்.. அரபு நாடுகளில் இந்த திரைப்படம் அரபு மொழியில் வெளியாகவிருக்கிறது. சவுதி அரேபியாவில் ஒரு இந்திய திரைப்படம், இத்தகைய அற்புதமானதொரு கவனத்தை பெறுவது இதுவே முதல் முறை.
இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடிக்க, அவருடன் ராதிகா, சஜ்னா, பூர்ணிமா உள்ளிட்ட இந்திய கலைஞர்களுடன் துனிசியா நாட்டை சேர்ந்த லத்திபா, ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த சலாமா, பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஜெனிபர், நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சரஃபினா, ஏமன் நாட்டை சேர்ந்த சுமையா, சிரியா நாட்டை சேர்ந்த இஸ்லாம் என பல நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களும் நடித்திருக்கிறார்கள்.
அமீர் பள்ளிக்கல் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் கண்ணிலு கண்ணிலு என்கிற பாடலுக்கு நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா நடனம் வடிவமைத்துள்ளார். இந்த பாடல் வீடியோ சமீபத்தில் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் வெளியாகி இருக்கிறது.
இந்த பாடலின்போது பயன்படுத்தப்பட்ட இசை, நேரலையாக பராகுவே மற்றும் செக் குடியரசு நாட்டு நாட்டிலிருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டன மேலும் இசையமைப்பாளர் ஜெயச்சந்திரன் இசையில், பாடலாசிரியர்கள் பிகே ஹரி நாராயணன் மற்றும் சுஹைல் கோயா ஆகியோர் எழுதிய பாடலுக்கு இந்திய மற்றும் அரபு நாட்டினை சேர்ந்த பின்னணி பாடகர்கள் இணைந்து பாடியுள்ளனர்.