விஜய்சேதுபதி, காயத்ரி நடிப்பில் வெளியான மாமனிதன் என்கிற படத்தை சீனுராமசாமி இயக்கி இருந்தார். இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு வெவ்வேறு பிரிவுகளில் பல விருதுகளை வென்றுள்ளது.

படம் வெளியான போது வசூல் ரீதியாக இல்லாவிட்டாலும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இந்த படம், ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வசூலை குவித்தது. இந்த நிலையில் சீனுராமசாமி தனது அடுத்த படத்தை இயக்க தயாராகியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக மாதம்பட்டி ரங்கராஜ் நடிக்கிறார்.

இவர் ஏற்கனவே மெஹந்தி சர்க்கஸ் என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர். மேலும் கேசினோ என்கிற திரைப்படத்தில் நடித்துள்ள இவர் நடிகர் யோகிபாபு உடன் இணைந்து பெயரிடப்படாத இன்னொரு திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது சீனு ராமசாமியின் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, சென்னை மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற இருக்கிறது. வரும் டிசம்பரில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது..