தற்போது சூர்யா நடிக்கும் 42வது படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் சிறுத்தை சிவா. அண்ணாத்த படத்திற்கு முன்பாகவே இந்த கூட்டணி இணையும் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் கதை வரலாற்றுப் பின்னணியில் உருவாகி வருகிறது என்பதை ஏற்கனவே வெளியிடப்பட்ட போஸ்டர்கள் உறுதிப்படுத்தின.
இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது முக்கிய வேடத்தில் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரும் இந்தப்படத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார்.
ஏற்கனவே 2009 இல் வெளியான ஆதவன் படத்தில் சூர்யாவை இயக்கியிருந்த கேஎஸ் ரவிக்குமார் அந்த படத்தின் கிளைமாக்ஸில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
அந்தவகையில் 13 வருடம் கழித்து மீண்டும் சூர்யாவுடன் இணைந்துள்ளார் கே.எஸ் ரவிக்குமார்.