தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தில் இளம்வயது வில்லனாக நடித்து ரசிகர்களிடம் நன்கு அறிமுகமானவர் அமிதாஸ் பிரதான்.
அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் வானம் கொட்டட்டும், குட்டி லவ் ஸ்டோரி, சமீபத்தில் வெளியான தள்ளிப்போகாதே உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் இயக்குனர் சி.அரவிந்தராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பரம்பொருள் என்கிற படத்தில் நாயகன் சரத்குமாருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அமிதாஸ் பிரதான் .
இந்த நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிய அமிதாஸ் பிரதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து வாழ்த்துக்களும் ஆசீர்வாதமும் பெற்றுள்ளார்.
இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன