இளைஞர்கள் சக்தியை பயனுள்ளதாக மாற்றும் விதமாகத்தான் தளபதி விஜய்யின் ரசிகர்கள், விஜய் அகில இந்திய நற்பணி இயக்கம் மூலமாக தொடர்ந்து பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டப் உதவிகளை செய்து வருகின்றனர். ஏழை மாணவர்களின் கல்வி மற்றும் வசதியற்றவர்களின் மருத்துவ செலவு ஆகியவற்றை முன்னின்று கவனித்து வருகின்றனர்.

சென்னையில் உள்ள சாலையோர கடை வியாபாரிகள் மழை காலங்களிலும் வெயில் காலங்களிலும் தாங்கள் தொழில் செய்வதற்கு நிழற்குடை வேண்டி அந்தந்த பகுதியில் உள்ள தளபதி மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களை அணுகினார்கள்.

தளபதி அவர்களின் உத்தரவின் படி அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நேற்று முதல் கட்டமாக 50 நிழற்குடைகளை சென்னையில் உள்ள திருவான்மியூர், அம்பத்தூர், தாம்பரம், சாலிகிராமம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் சாலையோர நடைபாதை கடைகளுக்கு அகில இந்திய பொதுச் செயலாளர் திரு புஸ்ஸி N. ஆனந்து அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர்கள் தாமு, அப்புனு, பாலமுருகன், சூரியநாராயணன், தொண்டரணி தலைவர் சரத் மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.