தமிழ் சினிமாவை பொருத்தவரை முன்னணி ஹீரோக்களில் நடிகர் அஜித் மட்டுமே ஒரே இயக்குனருடன் அடுத்தடுத்த படங்களில் இணைந்து பணியாற்றும் பழக்கத்தை வைத்துள்ளார்.
அந்த வகையில் சிறுத்தை சிவாவுடன் தொடர்ந்து நான்கு படங்களில் இணைந்து பணியாற்றிய அஜித் அதன்பிறகு நேர்கொண்ட பார்வை படத்தில் இயக்குனர் வினோத் உடன் இணைந்தார்.
அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து வலிமை படத்தில் மீண்டும் இணைந்த இந்த கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக துணிவு என்கிற படத்திலும் இணைந்து பணியாற்றி வருகிறது.
இந்த கூட்டணியை விடாமல் கட்டிக் காப்பாற்றி வருகிறார் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர்.
இந்த நிலையில் பாங்காங்கில் நடைபெற்று வந்த துணிவு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது இந்த படத்தில் கதாநாயகியாக மஞ்சுவாரியர் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.