Home News Kollywood அச்சம் என்பது இல்லையே படப்பிடிப்பில் அருண்விஜய் காயம்

அச்சம் என்பது இல்லையே படப்பிடிப்பில் அருண்விஜய் காயம்

இயக்குனர் விஜய் தற்போது அச்சம் என்பது இல்லையே என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக அருண் விஜய் நடிக்கிறார். கதாநாயகியாக இயக்குனர் விஜய்யால் அறிமுகப்படுத்தப்பட்ட மதராசபட்டணம் நாயகி எமி ஜாக்சன் இந்த படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்பி வந்துள்ளார்.

ஆக்ஷன் திரில்லராக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற்று வந்த நிலையில் ஆக்சன் காட்சிகளில் நடித்தபோது நடிகர் அருண்விஜய்க்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு காலில் கட்டு போடப்பட்டுள்ளது.

இது குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகர் அருண்விஜய் 100% நம்முடைய பங்களிப்பை தர முடியாத நிலை ஏற்படும்போது மன அழுத்தம் ஏற்படுகிறது என்று கூறியுள்ளார்.