தனுஷ் நடித்து கடந்த மாதம் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி வெளியானது.

சைக்கோ ஹாரர் திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியிருந்த இந்த படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இத்தனைக்கும் பொன்னியின் செல்வன் என்கிற ஒரு பிரமாண்ட வரலாற்றுப் படம் இதே சமயத்தில் தியேட்டர்களில் வெளியாகி இருந்தாலும், நானே வருவேன் படத்திற்கான வரவேற்பு உற்சாகமும் தியேட்டர்களில் இன்னும் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.

குறிப்பாக இந்த படத்தை பார்த்த பலரும் ரிப்பீட் ஆடியன்ஸ் ஆக மீண்டும் தியேட்டருக்கு படம் பார்க்க வருகிறார்கள். என்பதுதான் நானே வருவேன் படம் நிகழ்த்தியுள்ள மேஜிக் என்று கூட சொல்லலாம்.

இந்த படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில், குறிப்பாக சைக்கோ குணம்கொண்ட கதிர் கதாபாத்திரத்தில் தனுஷ் வித்தியாசமான நடிப்பை வழங்கியுள்ளார். அந்த கதாபாத்திரத்தை ரசிகர்கள் அதிக அளவில் பாராட்டி வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் படம் வெளியாகி உள்ள நிலையிலும் கூட தற்போது தியேட்டர்களில் கூட்டம் குறையாமல் நானே வருவேன் திரைப்படம் ஓடிக்கொண்டிருப்பது திரையுலகில் மிகப்பெரிய வியப்பை ஏற்படுத்தியுள்ளது.