தமிழ் சினிமாவில் நாளுக்குநாள் எடுக்கப்படும் படங்கள் அதிக எண்ணிக்கையிலும், மிக பிரம்மாண்டமாகவும் எடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் தேவையை ஈடு செய்யும் அளவிற்கு தொழில்நுட்ப கூடங்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் தேவைப்படுகின்றது. இந்த சமயத்தில் இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷின் மனைவியும் பின்னணி பாடகியுமான சைந்தவி சென்னையில் நுங்கம்பாக்கத்தில் சவுண்ட் ஸ்லைட் என்கிற பெயரில் புதிய ஸ்டூடியோ ஒன்றை துவங்கியுள்ளார்.
இதன் துவக்க விழாவில் ஜி.வி பிரகாஷ், கலைப்புலி தாணு, இயக்குனர் விஜய், தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன், பின்னணி பாடகர்கள் ஷிவாங்கி, சத்ய பிரகாஷ், ஹரிப்ரியா, பிரியங்கா, ஆதித்யா,, உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இந்த ஸ்டுடியோவில் ஏ’ பிரிவில் டால்ஃபி அட்மாஸ் HE, ஸ்டேட் ஆஃப் த ஆர்ட் ரெகார்டிங் வசதியும் மற்றும் பல்வேறு நவீன வடிவ மிக்ஸிங் மற்றும் மாஸ்டரிங் வசதி உள்ளது.
ஸ்டுடியோ பி’ பிரிவில் ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட் ஸ்டீரியோ ரெக்கார்டிங் மற்றும் ஏடிஆர் வசதிகள் (டப்பிங்) ஜாம் பேட் – செட் அப்பில் ஒரே நேரத்தில் 16 இசைக்கலைஞர்கள் / பாடகர்கள் இயங்கும் சுதந்திரமான வெளியும் உள்ளது
’சவுண்ட்ஸ் ரைட்’ ஸ்டுடியோ குறித்து பேசிய பாடகி சைந்தவி ,”இந்த ரெக்கார்டிங் ஸ்டுடியோவைத் துவக்கவேண்டும் என்பது எனது சில ஆண்டுகால கனவு என்றுதான் சொல்லவேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே துவங்க முயன்றபோது, ஒரு பொல்லாத பூனையைப்போல் ,கொரோனா குறுக்கே வந்துவிட்டது. இறுதியில், ஒருவழியாக அந்தக் கனவு இன்று நிஜத்திற்குள் காலடி எடுத்து வைக்க ஆரம்பித்திருப்பதில் எல்லையில்லா மகிழ்ச்சி” என்று கூறினார்.