தொண்ணூறுகளில் ஜென்டில்மேன், காதலன், காதல் தேசம் உள்ளிட்ட பிரமாண்டமான படங்களை தயாரித்தவர் கே.டி.குஞ்சுமோன். ஷங்கர். பிரபுதேவா. ஏ.ஆர்.ரஹ்மான் என இன்றைய பிரபலங்கள் அனைவருக்கும் முகவரி கொடுத்தவர் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு. சில வருடங்களாக தயாரிப்பில் இருந்து விலகியிருந்தவர், தற்போது மீண்டும் தயாரிப்பில் இறங்கியுள்ளார்.
ஜென்டில்மேன்-2 என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் மரகதமணி இசையமைக்கிறார் என்று சில நாட்களுக்கு முன்பு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார் கே.டி.குஞ்சுமோன். இந்த படத்தை இயக்குவது யார். நாயகன் நாயகி யார் என்பது சஸ்பென்ஸாக இருந்தது
பின் ஒவ்வொரு ஸ்டெப்பாக படத்தின் நாயகிகள், இசையமைப்பாளர் கீரவாணி, இயக்குனர் ஆஹா கல்யாணம்’ புகழ் ஏ.கோகுல் கிருஷ்ணா என சீரான இடைவெளியில் ஒவ்வொருவராக அறிவித்து சஸ்பென்ஸை உடைத்து வந்தார் குஞ்சுமோன். இந்த படத்திற்கு இன்னும் கதாநாயகன் மட்டும்தான் அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகனாக சேத்தன் சீனு என்பவர் நடிக்கிறார் என அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் கேடி குஞ்சுமோன் தமிழில் மு.களஞ்சியம் இயக்கிய கருங்காலி என்கிற படத்தில் அஞ்சலிக்கு ஜோடியாக நடித்தவர் தான் இந்த சேத்தன் சீனு.
இவர் தற்போது புன்னகை பூவே, கண்ணுக்குள் நிலவு, காசி, சமுத்திரம் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை காவேரி கல்யாணி இப்போது இயக்குனராக மாறி தமிழ், தெலுங்கில் உருவாக்கி வரும் பான் இந்திய படம் ஒன்றை இயக்கி வருகிறார் இந்தப்படத்திலும் கதாநாயகனாக நடித்து வருகிறார் சேத்தன் சீனு.