மறைந்த தமிழக முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவான தலைவி என்கிற படத்தை தொடர்ந்து இயக்குனர் விஜய் தற்போது இயக்கி வரும் படம் அச்சம் என்பது இல்லையே.

இந்த படத்தில் அருண்விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நடிப்பது வேறு யாருமல்ல.. சாட்சாத் எமி ஜாக்சன் தான்.. மதராசப்பட்டினம் படம் மூலம் இயக்குனர் விஜய்யால் தமிழ் சினிமாவில் அறிமுகமான எமி ஜாக்சன், மீண்டும் அவர் படத்தின் மூலமே திரும்பி வந்துள்ளது ஆச்சரியம் தான்.

மதராசப்பட்டினம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் 2.O படத்தில் இணைந்து நடிக்கும் அளவுக்கு, ஷங்கரின் டைரக்ஷனில் இரண்டு படங்களில் கதாநாயகியாக தொடர்ந்து நடிக்கும் அளவுக்கு மிகப்பெரிய புகழைப் பெற்றார் எமிஜாக்சன்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு இந்தியிலும் கூட நல்ல வரவேற்பு இருந்த நிலையில் திருமணம் செய்துகொண்டு தனது சொந்த நாட்டிலேயே செட்டிலானார். இந்த நிலையில் நடிப்பு அவரை விடாமல் மீண்டும் மதராசப்பட்டிணத்துக்கே இழுத்து வந்து விட்டது என்று சொல்லலாம்.