V4UMEDIA
HomeNewsKollywoodதிருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார் ஜஸ்டின் பிரபாகரன்

திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார் ஜஸ்டின் பிரபாகரன்

தமிழில் விஜய்சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜஸ்டின் பிரபாகரன். ஒருநாள் கூத்து படத்தில் இவர் இசையமைத்த ‘அடியே அழகே’ பாடல் சூப்பர் ஹிட்டானது. தொடர்ந்து மீடியமான படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வந்த ஜஸ்டின் பிரபாகரனுக்கு ஜாக்பாட் வாய்ப்பாக பிரபாஸ் நடித்த ராதேஷ்யாம் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்து தென்னிந்திய அளவில் பிரபலமானார்.

இந்த நிலையில் இவருக்கும் கரோலின் சூசன்னாவுக்கும் இன்று காலை  மதுரையில் உள்ள சர்ச் ஒன்றில் திருமணம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மதுரை எல்லீஸ் நகரில் உள்ள MRC மஹாலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சமுத்திரகனி, ஷாந்தனு பாக்யராஜ், கலையரசன், காளி வெங்கட், பால சரவணன், ஆதித்யா கதிர், இயக்குனர்கள் பா.ரஞ்சித், விக்ரம் சுகுமாரன், நாகராஜ், மான்ஸ்டர் பட இயக்குனர் நெல்சன், அதியன் ஆதிரை, ப்ராங்கிளின் ஜேக்கப், ஷான், பரத் கம்மா, விவேக் சோனி, தயாரிப்பாளர் S.R.பிரபு, பின்னனி பாடகர் கிருஷ், அந்தோணிதாசன், பாடலாசிரியர் மதன் கார்க்கி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Most Popular

Recent Comments