ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் நெல்சன் வெங்கடேசன். மான்ஸ்டர் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக இவர் இயக்கும் படம் ஃபர்ஹானா. இந்த படத்தில் கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் இதுவரை ஏற்றிராத ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் இயக்குநர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். பண்ணையாரும் பத்மினியும், மான்ஸ்டர், ராட்சசி உள்ளிட்ட படங்களின் மூலம் ஒளிப்பதிவில் முத்திரை பதித்த கோகுல் பினாய் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார்.
மெலடி பாடல்கள் மூலம் இளைஞர்கள் மனதினைக் கொள்ளை கொண்டு வரும் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். தேசிய விருது வென்ற சாபு ஜோசப் எடிட்டராக பணிபுரிந்துள்ளார்.
பிரபல கவிஞர் மற்றும் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் இத்திரைப்படத்தின் வசனங்களை எழுதியுள்ளார்