கடந்த நான்கு வருடங்களுக்கு முன் வெளியான வெள்ள ராஜா என்கிற படத்தை இயக்கியவர் இயக்குனர் குகன் சென்னியப்பன். தற்போது நடிகர் சத்யராஜ் மற்றும் ராக்கி புகழ் வசந்த் ரவி இருவரையும் கதையின் நாயகர்களாக வைத்து வெப்பன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் இதற்கு முன்பு சத்யராஜ் தான் ஏற்ற கதாபாத்திரத்திங்களில் இருந்து மாறுபட்டும் அதேபோன்று நடிகர் வசந்த் ரவி இந்த படத்திற்காக தாடி இல்லாத முக தோற்றத்துடனும் நடித்துள்ளனர்.
இந்த தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் இயக்குனர் குகன் படம் பற்றி கூறும்போது, அமைதிப்படை காலத்திலிருந்தே சத்யராஜ் சாரின் தீவிர ரசிகன் நான். தற்போதைய படங்களில் சத்யராஜ் வழக்கமான அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால் இந்தப்படத்தில் அவர் ரொம்பவே கோபமும் ஆக்ரோஷமும் கொண்ட எதையும் செய்யத்துணிந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர்தான் இதற்கு பொருத்தமாக இருந்தார் அதேபோல வசந்த் ரவியின் கதாபாத்திரமும் இவருக்கு சமமான கதாபாத்திரமாகவே உருவாக்கப்பட்டுள்ளது இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்” என்று கூறியுள்ளார்