90களில் இதயத்தை திருடாதே, உதயம் என தான் நடித்த தெலுங்கு படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியானபோது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவர் நடிகர் நாகார்ஜுனா. அதன்பிறகு ரட்சகன், பயணம், தோழா ஆகிய நேரடி தமிழ் படங்களில் நடித்து வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் தெலுங்கில் பிரவீன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள தி கோஸ்ட் என்கிற திரைப்படம் வரும் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படம் ரட்சன் ; தி கோஸ்ட் என்கிற பெயரில் தமிழில் வெளியாகிறது. இதைத்தொடர்ந்து இதன் சந்திப்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் நாகார்ஜுனா கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறும்போது, “நான் பிறந்து வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னையில்தான் தமிழில் ரட்சகன் படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே மணிரத்னம் இயக்கிய கீதாஞ்சலி படத்தின் மூலம் பிரபலமானேன். அவருடன் கீதாஞ்சலி படத்தில் பணியாற்றிய அனுபவம் என்றால் மறக்க முடியாதது மணிரத்னத்தை மணி என்று தான் நான் அழைப்பேன்.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. தம்பி கார்த்திக்கு விக்ரம், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.

முதலில் ரட்சன் படத்தை தமிழில் வெளியிடும் யோசனை இல்லை. ஆனால் பிற மொழிகளில் வெளியிடவேண்டும் என்று யோசித்தபோது தமிழிலும் வெளியிட வேண்டும் என முடிவு எடுத்தோம்.

இந்த படத்திற்கு நானே டப்பிங் பேசியிருக்கிறேன். இதற்கான வசனத்தை மொழிபெயர்த்து, தமிழ் உச்சரிப்புக்கு உதவிகரமாக இருந்த அசோக்கிற்கு நன்றி. என்று கூறியுள்ளார்