தமிழில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளியான விக்ரம் வேதா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்றது. இந்த படத்தில் விக்ரம் கதாபாத்திரத்தில் மாதவனும் வேதா கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதியும் மிக அருமையான நடிப்பை வழங்கிய விக்ரம் வேதா ஆகவே மாறி இருந்தார்கள்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்தப் படம் இந்தியில் விக்ரம்வேதா என்கிற பெயரிலேயே ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இயக்குனர் புஷ்கர் காயத்ரியே இந்தியிலும் இந்த படத்தை இயக்கியுள்ளார்கள்.
விக்ரம் கதாபாத்திரத்தில் சயீப் அலிகானும் வேதா கதாபாத்திரத்தில் ஹிருத்திம் ரோஷனும் நடித்துள்ளனர். கடந்த வெள்ளியன்று வெளியான இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள மாதவன் குறிப்பாக இதில் வேகமாக நடித்த ஹிரித்திக் ரோஷனின் நடிப்பை புகழ்ந்து பாராட்டி உள்ளார்.