வித்தியாசமான கதாபாத்திரங்களையும் கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் விஜய்சேதுபதி பாலிவுட்டிலும் கால்பதித்து இரண்டு மூன்று படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்றுதான் காந்தி டாக்ஸ்.
பிளாக் காமெடி ஜானரில் உருவாகும் இந்த படம் வசனம் இல்லாத மவுன படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் அதிதி ராவ் ஹைதாரி மற்றும் அரவிந்த்சாமியும் இணைந்து நடிக்கின்றனர். இயக்குநர் கிஷோர் பி பெலேகர் இப்படத்தை இயக்குகிறார்..
இந்த படம் பற்றி அவர் கூறும்போது மௌனப்படம் என்பது வித்தை காட்டும் ஒரு செயல் அல்ல இது கதைசொல்லலின் ஒரு வடிவம் என்றார்.. பேசும் மொழியான வசனத்தை முற்றிலும் நிராகரித்துவிட்டு உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது கடினமானது மட்டுமல்ல, சுவாரஸ்யமும் சவாலும் கூட என்கிறார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் அறிமுக ப்ரோமோ படத்தின் மையத்தை பார்வையாளர்களுக்குக் கொடுத்தது. ஒரு மௌனப் படமாக இருப்பதால், காந்தி டாக்ஸ் அனைத்து ‘மொழி’ தடைகளையும் உடைத்து, மறந்து போன கடந்தகால மௌனப்பட சகாப்தத்தை- நிகழ்காலத்தில் பார்வையாளர்களுக்கு தரும் ஒரு பேரனுபவமாக இருக்கும் என்பது உறுதி.