Home News Kollywood ஆயிஷாவுக்காக மஞ்சு வாரியரை ஆட்டுவித்த பிரபுதேவா

ஆயிஷாவுக்காக மஞ்சு வாரியரை ஆட்டுவித்த பிரபுதேவா

மலையாள திரையுலகில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய நடிகையாக வலம் வருபவர் மஞ்சுவாரியர். ஒரு காலகட்டம் வரை மலையாளத்திலேயே பயணித்து வந்த இவர், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அசுரன் படம் மூலமாக தமிழுக்கு வந்தார்.

அசுரன் படத்தில் தனுசுக்கு ஜோடியாக, இரண்டு இளைஞர்களுக்கு அம்மாவாக மிக அருமையான நடிப்பை வெளிப்படுத்திய அவருக்கு தமிழ் ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவையும் வரவேற்பு கொடுத்தனர். அதைத்தொடர்ந்து தற்போது அஜீத்துக்கு ஜோடியாக துணிவு என்கிற படத்தில் நடித்து வருகிறார் மஞ்சுவாரியர்.

இன்னொரு பக்கம் மலையாளம், தமிழ், அரபி உள்ளிட்ட ஏழு மொழிகளில் தயாராகி வரும் ஆயிஷா என்கிற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் மஞ்சுவாரியர். இந்த படத்தை அமீர் பள்ளிக்கல் என்பவர் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கண்ணிலு கண்ணிலு என்கிற பாடலுக்கு பிரபுதேவா மாஸ்டர் நடனம் வடிவமைத்துள்ளார். இந்த பாடலின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. மஞ்சு வாரியரின் இளமை துள்ளலான நடனமும் பிரபுதேவா மாஸ்டர் நடந்த குழுவினரை ஆட்டுவிக்கும் விதமும் என இந்த பாடல் மிகப்பெரிய ஹிட்டாகும் என இப்போதே தெரிகிறது.

இந்த பாடலை பாடலாசிரியர் பி. கே. ஹரி நாராயணன் மற்றும் சுகைல் கோயா ஆகியோர் எழுதியுள்ளனர். ஜெயச்சந்திரன் இசையமைத்திருக்கிறார். இந்தப் பாடலை இந்திய மற்றும் அரபு நாட்டை சேர்ந்த பின்னணி பாடகர்கள் இணைந்து பாடி இருக்கிறார்கள்