உலக தமிழ் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. அமரர் கல்கி எழுதி நாவலின் சாராம்சம் குறையாமல் அதேசமயம் சுவாரசியமாக அனைத்து தரப்பு ரசிகர்களும் பார்த்து ரசிக்கும் விதமாக இந்த படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். இந்த படம் வெளியான முதல் நாளன்று 80 கோடி வசூலித்து மிகப்பெரிய சாதனை செய்துள்ளது.
இந்த படத்தில் ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, கார்த்தி என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பொருத்தமான நட்சத்திரங்களை தேர்வு செய்து பயன்படுத்தியதன் மூலம் இந்த படத்தை மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் கொண்டு சென்றுள்ளார் மணிரத்னம்.
இதைத் தொடர்ந்து இந்த படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் சார்பாக தமிழ்க்குமரனும் இந்த படத்தை தமிழகத்தில் வெளியிட்டுள்ள ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக செண்பகமூர்த்தியும் மணிரத்னத்தை அவர்களை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.