V4UMEDIA
HomeNewsKollywoodவீடியோ காலிலேயே கதை சொல்லி தயாரிப்பாளரை சம்மதிக்க வைத்த ஆரகன் பட இயக்குநர்

வீடியோ காலிலேயே கதை சொல்லி தயாரிப்பாளரை சம்மதிக்க வைத்த ஆரகன் பட இயக்குநர்

ட்ரெண்டிங் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஹரிஹரன் பஞ்சலிங்கம் தயாரித்துள்ள படம் ‘ஆரகன்’. அறிமுக இயக்குநர் அருண்குமார் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நடிகர் மைக்கேல் தங்கதுரை கதாநாயகனாக நடித்துள்ளார். இலங்கையை பூர்வீகமாக கொண்ட கவிப்பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ஸ்ரீரஞ்சனி, கலைராணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சூர்யா ஒளிப்பதிவில், விவேக்-ஜெஸ்வந்த் இரட்டையர் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குநர் அருண்குமார் பேசும்போது, “இது எனக்கு முதல் படம்தான்.. கொரோனா காலகட்டத்தில் இந்த படத்தின் தயாரிப்பாளரை நேரில் சந்திக்க முடியாமல் வீடியோ கால் மூலமாகவே பேசி அவரிடம் சம்மதம் வாங்கினேன். அந்த அளவிற்கு என்னை நேரில் பார்க்காமலேயே என்மீது நம்பிக்கை வைத்து இந்தப்படத்தை தயாரிக்கும் அளவிற்கு, ஸ்கிரிப்ட் வலுவாக இருந்தது. அதனால் அவரை கடவுள் அனுப்பி வைத்த ஏஞ்சல் என்றுதான் சொல்வேன்” என்றார்.

இயக்குனர் பேரரசு பேசும்போது, “நான் சினிமாவிற்கு முயற்சித்த காலகட்டத்தில் பல பேரிடம் நேரில் சென்று கதைசொல்லி பலவித கசப்பான அனுபவங்களை பெற்று உள்ளேன் ஆனால் தயாரிப்பாளரை சந்திக்காமல் வீடியோ காலிலேயே கதைசொல்லி வாய்ப்பு பெற்றிருக்கிறார் என்றால் இதுவே இயக்குனர் அருண்குமாருக்கு கிடைத்த முதல் வெற்றி” என்றார்

Most Popular

Recent Comments