கடந்த 2020 ஆம் வருடம் வெளியான சிறந்த படம் சிறந்த நடிகர் உள்ளிட்ட பல பிரிவுகளில் சமீபத்தில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அந்தவகையில் தமிழில் சூரரைப்போற்று திரைப்படத்திற்காக சிறந்த நடிகராக சூர்யா, சிறந்த நடிகையாக அபர்ணா பாலமுரளி, சிறந்த இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ், சிறந்த தயாரிப்பாளராக ஜோதிகா, சிறந்த கதாசிரியராக இயக்குனர் சுதா கொங்கரா என ஐந்து பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன.
அதேபோல சிவரஞ்சனியும் சில பெண்களும் படத்திற்காக இயக்குனர் வசந்த் சாய் தேர்வு செய்யப்பட்டார். மேலும் அந்த படத்தில் நடித்த நடிகை லட்சுமி பிரியா சிறந்த துணை நடிகையாகவும் ஸ்ரீகர் பிரசாத் சிறந்த எடிட்டராகவும் விருதுகளுக்கு அறிவிக்கப்பட்டனர்.
அதுமட்டுமல்ல யோகிபாபு கதாநாயகனாக நடித்த மண்டேலா படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குனர் மற்றும் வசனத்திற்கு இயக்குனர் மடோன் அஸ்வின் ஆகியோரும் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்கள். இதன் தயாரிப்பாளர் சசிகாந்த்துக்கும் சிறந்த தயாரிப்பாளரான விருது அறிவிக்கப்பட்டது
இந்தநிலையில் நேற்று டெல்லியில் நடைபெற்ற தேசிய விருது வழங்கும் விழாவில் சாதனையாளர்கள் அனைவரும் நேரில் கலந்து கொண்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மூ தலையில் கைகளால் விருதுகளை பெற்றுக்கொண்டனர்.