தனுஷ் நடிப்பில் அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நானே வருவேன். செப்டம்பர் 29ஆம் தேதி வெளியான இந்த படத்தில் தனுஷ் கதாநாயகன், வில்லன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த படம் ஹாரர் திரில்லர் ஜானரில் உருவாகி தனுஷ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக அமைந்தது.
அதேசமயம் இந்த படம் வெளியான மறுநாளே அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் திரைப்படமும் வெளியாகியுள்ளதால் நானே வருவேன் படத்திற்கு பாதிப்பு வருமோ அதன் வசூல் பாதிக்கப்படுமோ என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.
ஆனால் முதல்நாளே 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இந்த படம் தொடர்ந்து திரையிட்ட இடங்களிலெல்லாம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் அடுத்த நான்கு நாட்களுக்கு முன் பதிவு காட்சிகள் மூலமாகவே திரையரங்குகள் நிரம்பி விட்டது பார்க்க முடிகிறது.
பொன்னியின் செல்வன் ஒரு பக்கம் அதன் போக்கிலும் நானே வருவேன் அதனால் பாதிக்கப்படாமல் இன்னொரு திசையிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. இது சினிமாவில் ஆரோக்கியமான விஷயம் என்று சொல்லலாம்.