திருச்சிற்றம்பலம் என்கிற மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த தனுஷ் நடிப்பில் அடுத்ததாக தற்போது வெளியாகியுள்ள படம் நானே வருவேன். கலைப்புலி தாணு இந்தப்படத்தை தயாரித்துள்ளார். தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நீண்ட நாட்கள் கழித்து தனுஷ் நடித்துள்ளார்..
அதிலும் ஹீரோ வில்லன் என்பதுபோல இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். அதனாலேயே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 29) வெளியான இந்தப் படம் முதல் நாளே 10 கோடியே 12 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது.
இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இயக்குனர் செல்வராகவனின் வீட்டிற்கு நேரிலேயே சென்று மாலை அணிவித்து தனது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.