உலக தமிழ் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஆண்கள் கதாபாத்திரம் என நிறைய இருந்தாலும் பெண் கதாபாத்திரங்களாக ரசிகர்களை கவர்ந்தவர்கள் நந்தினியும் குந்தவையும் தான்.

இதில் நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யாராயும் குந்தவை கதாபாத்திரத்தில் திரிஷாவும் நடித்திருந்தனர். இந்த படம் மணிரத்னம் மூலமாக துவங்கப்பட்டபோதே இந்த கதாபாத்திரங்களில் யார் யார் நடிக்கப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவியது.

தற்போது படம் வெளியாகி உள்ள நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் திரிஷா இருவரின் கதாபாத்திரங்களுக்குமே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் நடிகை மீனா இந்த படத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யாராயின் நடிப்பு குறித்து கூறும் விதமாக, அவரது புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மேலும் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது தன்னுடைய நீண்ட நாள் கனவாக இருந்ததாகவும் அந்த வாய்ப்பு தற்போது ஐஸ்வர்யாராய்க்கு கிடைத்துள்ளது ஒரு பக்கம் தனக்கு பொறாமையாக தான் இருக்கிறது. அப்படி நான் பொறாமை கொள்வது இதுவே முதல் தடவை என்று தனது எண்ணத்தை பாசிட்டிவாக பகிர்ந்துள்ளார். மேலும் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் இருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் மீனா.

சில மாதங்களுக்கு முன்பு மீனாவின் கணவர் அகால மரணமடைந்த நிலையில் அந்த அதிர்ச்சியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி இயல்பு நிலைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கிறார் மீனா இந்த நிலையில் அவர் இப்படி வெளியிட்டுள்ள பதிவு அவர் பழைய மீனாவாக மாறிவிட்டார் என்பதை பறைசாற்றும் விதமாக இருக்கிறது.