Home News Kollywood பாசக்கார அண்ணனாக மாறிய கிஷோர்

பாசக்கார அண்ணனாக மாறிய கிஷோர்

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துவரும் நடிகர் கிஷோர் சில படங்களில் இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவற்றிலிருந்து மாறுபட்டு மஞ்சக்குருவி என்கிற படத்தில் பாசக்கார அண்ணனாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் கிஷோரின் தங்கையாக நீரஜா என்பவர் நடித்துள்ளார். பாசமலர், கிழக்குசீமையிலே படங்களை போல அண்ணன் தங்கை கதாபாத்திரங்களை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தை அரங்கன் சின்னத்தம்பி என்பவர் இயக்கியுள்ளார்.

இதில் வில்லனாக குங்பூ மாஸ்டர் ராஜநாயகம் என்பவர் நடித்துள்ளார். இவர்களுடன் விஸ்வா, கஞ்சா கருப்பு, சாரப்பாம்பு சுப்புராஜ், சூப்பர்குட் சுப்பிரமணி, கோலிசோடா பாண்டி, சுஜாதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் சௌந்தர்யன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் இசை அமைத்துள்ளார்

அண்ணன் தங்கை மீது விழும் பாசத்தை காட்டினால் மட்டும் போதாது அதையும் தாண்டி பல விஷயங்கள் இருக்கிறது என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த படத்தை உருவாக்கி உள்ளதாக கூறுகிறார் இயக்குனர் அரங்கன் சின்னத்தம்பி.