தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று ஜல்லிக்கட்டு. அதற்கு எத்தனை தடை வந்தாலும் அதை அத்தனையையும் உடைத்து இப்போது வரை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது இந்தநிலையில் ஜல்லிக்கட்டை மையப்படுத்தி இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் பேட்டைக்காளி என்கிற வெப் தொடர் ஒன்று உருவாகி உள்ளது.
இதனை ராஜ்குமார் என்பவர் இயக்கியுள்ளார் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இதில் கதாநாயகியாக ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார். இந்த பேட்டைக்காளி வெப்சீரிஸ் வரும் தீபாவளி பண்டிகை முதல் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.