தெலுங்கில் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள படம் சாகுந்தலம். மலையாள நடிகர் தேவ்மோகன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை பிரபல இயக்குனர் குணசேகர் இயக்கியுள்ளார். இப்படத்தின் கதை, உலகப் புகழ்பெற்ற புராதன காவியமான மகாபாரதத்தில் உள்ள சகுந்தலை மற்றும் ராஜா துஷ்யந்தன் அவர்களின் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இதில் நடிகை சமந்தா ‘ஷகுந்தலையாகவும்’, தேவ் மோகன், ‘ராஜா துஷ்யந்தனாகவும்’ நடித்துள்ளனர். இந்த படம் வரும் டிசம்பர் நாலாம் தேதி வெளியாவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

ஆனால் புராதான கதையை இன்னொரு பரிமாணத்தில் கொடுத்துள்ளதுடன் இந்த படத்தை மேலும் மெருகேற்றும் விதமாக 3டியில் வெளியிட இருக்கின்றனர். தெலுங்கு மட்டுமல்லாது பான் இந்தியத் திரைப்படமாக அதுவும் 3டியில் உருவாவதால் தற்போது படத்தின் மொத்த பணிகளை முடித்தபின்பே வேறு ஒரு தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்