இயக்குனர் சுசிகணேசன் இயக்கிய பைவ்ஸ்டார் திரைப்படம் திரைப்படம் கடந்த 2002ஆம் வருடம் வெளியானது இந்த படத்தில் கதாநாயகனாக பிரசன்னாவும் நாயகியாக கனிகாவும் அறிமுகம் ஆனார்கள். இந்த நிலையில் 20 வருடங்கள் கழித்து தற்போது இவர்கள் இருவரும் மேட் கம்பெனி என்கிற வெப்சீரிஸில் இணைந்து நடித்துள்ளனர்.
பாலாஜி மோகன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸை இயக்குனர் விக்னேஷ் விஜயகுமார் என்பவர் இயக்கியுள்ளார். இந்தத் தொடரில் மேலும் நடிகர் எஸ்.பி.பி சரண், நடிகை தான்யா பாலகிருஷ்ணா ஆகியோர் இதில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் ஆஹாவில் வரும் இந்த வெப்சீரிஸ் ஒளிபரப்பாக இருக்கிறது பணியிடத்தில் நடைபெறும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு காமெடி ஜானரில் இந்த வெப்சீரிஸில் உருவாகி உள்ளது
நடிகர் பிரசன்னா பேசும்போது, “நம்ம வாழ்க்கைக்குள்ள மிஸ் பண்ற அல்லது மிஸ் பண்ணிட்மோம்னு நினைக்குற ஒரு கேரக்டர் கூட, நடிகர்கள வரவெச்சி நடிக்க வெச்சா எப்படியிருக்கும் என்கிற ‘மேட்’ ஐடியா தான் இந்த ‘மேட் கம்பெனி’யோட அடித்தளம். ஒவ்வொரு எபிசோடும், ஒவ்வொரு ஜானர்ல இருக்கும். அது எல்லாத்தையும் ஜாலியா.. எண்டர்டெனிங்கா.. பண்ணியிருக்கோம். ‘பொன்னியின் செல்வன்’, ‘நானே வருவேன்’ ஆகிய படங்களைப் பார்த்தபிறகு, டைம் கிடைக்கும் போது, ‘ஆஹா’ல இருக்குற, இந்த ‘மேட் கம்பெனி’யோட எட்டு எபிசோடையும் பாருங்க.” என்றார்.