தமிழில் ஒரு புதிரான காதல் கதையை மையமாக வைத்து உருவாகிவரும் படம் பனாரஸ். இந்த படத்தை ஜெயேந்திரா என்பவர் உள்ளார்.. ஜையத் கான் மற்றும் சோனல் மாண்டெய்ரோ ஆகியோர் நடித்துள்ள இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. வரும் நவம்பர் 4-ஆம் தேதி இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

இந்தநிலையில் இந்தப்படத்தின் பிரம்மாண்ட ட்ரெய்லர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நடைபெற்றது.. அந்நிகழ்வில் பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் ரவிச்சந்திரன், நடிகர் சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ்கான் உட்பட பலர் கலந்துகொண்டனர்

இந்த நிகழ்வில் இயக்குநர் ஜெயதீர்த்தா பேசும்போது,” இதுவரை 7 படங்களை இயக்கியுள்ளேன். ஒவ்வொரு முறையும் ஒரு புது ஜானர் கதைகளைத்தான் எடுத்து வந்துள்ளேன். அதனால் எனக்கு நிரந்தர ரசிகர்கள் இல்லை. இந்த ‘பனாரஸ்’ படமும் அப்படிப்பட்ட முற்றிலும் ஒரு ஜானர் வகையறா படம்தான். இது ஒரு டைம்லைன் காதல் கதை. காசியின் அத்தனை அழகையும் படத்தில் அள்ளி வந்துள்ளோம். இதுவொரு யுனிவர்சல் சப்ஜெக்ட் என்பதால் பான் இந்தியா படமாக வருவதற்கு அத்தனை தகுதியும் உள்ள படம்’ என்றார்