சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 42வது படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களாகவே இந்த கூட்டணி இணையும் என எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவதுடன் மேலும் அது சரித்திர படமாக உருவாவைவதால் ஆச்சரியத்துடன் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளன.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் சூட்டிங்ஸ்பாட்டில் இருந்து சமீபத்தில் ஒரு சில புகைப்படங்களும் சில வீடியோ குறிப்புகளும் சோசியல் மீடியாவில் வெளியாகின. இது படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து படத்தை தயாரித்து வரும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளது.
அதில் ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொருவரின் உழைப்பும் வியர்வையும் சிந்தி மிகுந்த பொருட்செலவில் படமாக்கப்பட்டு வருகின்றன. இவற்றை தயவுசெய்து யாரும் புகைப்படமோ வீடியோக்களோ எடுக்க வேண்டாம். அவற்றை சோசியல் மீடியாவில் பகிரவும் வேண்டாமென்று கேட்டுக்கொண்டுள்ளார்.