கடந்த 3 மாதங்களுக்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. அதைத் தொடர்ந்து தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன்2 படத்திலும் நடித்து வருகிறார்
கடந்த நான்கு வருடங்களாக கமல் படங்கள் எதுவும் ரிலீஸாகாத நிலையிலும்,. விக்ரம் படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருந்த கமல் தனது உடலை கட்டுமஸ்தாக வைத்திருந்ததை பார்க்க முடிந்தது. அதேபோல இந்தியன் 2 படத்திலும் ஆக்சன் காட்சிகளில் நடிப்பதற்காக முழு உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் கமல்.

67 வயதிலும் இப்படி பிட்னஸ் ஆக தனது உடலை வைத்துக் கொள்வதற்கு காரணமாக இருக்கும் தனது ஜிம் பயிற்சியாளர் ஒலிம்பியா சூரி என்பவருக்கு தற்போது ரெனால்ட் க்விட் என்கிற காரை பரிசாக வழங்கியுள்ளார் கமல்..

குறிப்பாக விக்ரம் படத்தில் நடித்த தோற்றத்திலிருந்து இந்தியன்-2வுக்காக தன்னை மாற்றிக்கொள்ள உதவி செய்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த பரிசை வழங்கி உள்ளாராம் கமல்.

இதற்கு முன்னதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கார், அவரது உதவி இயக்குனர்களுக்கு பைக், நடிகர் சூர்யாவுக்கு வாட்ச் ஆகியவற்றை கமல் பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.