நடிகர் வடிவேலுவுடன் அவர் நடிக்கும் படங்களில் இணைந்து நடிக்கும் சக காமெடி நடிகர் வட்டாரங்களில் மிகவும் முக்கியமான ஒருவர் நடிகர் போண்டாமணி. இவர் பல படங்களில் வடிவேலுவுடன் நடித்திருந்தாலும் கண்ணும் கண்ணும் படத்தில் குளத்து நீரில் மூழ்கி எழுந்து வடிவேலுவிடம் அண்ணே யாரும் உங்களை அடிச்சு கூட கேப்பாங்க.. அப்பகூட சொல்லிடாதீங்க என எதையுமே சொல்லாமல் வடிவேலுவை டீலில் விட்டு செல்லும் காமெடி இப்போது வரை இவரது காமெடிகளில் நம்பர் ஒன் ரகம்.
அதன்பிறகு வடிவேலு கடந்த சில வருடங்களாகவே நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்ததால் போண்டாமணி, முத்துக்காளை, பாவா லட்சுமணன் உள்ளிட்ட அவருடன் நடித்துவந்தா பலருக்கும் படங்களில் பெரிய அளவு வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டு போண்டாமணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அவரது சிகிச்சைக்கு உதவ வேண்டும் என்றும் சக காமெடி நடிகர் பெஞ்சமின் என்பவர் வீடியோ வெளியிட்டிருந்தார்.
இதை தொடர்ந்து அமைச்சர் மா சுப்பிரமணியன் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரிஹ்து அவருக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் நடிகர் விஜய்சேதுபதி தனது சார்பாக ஒரு லட்சம் ரூபாயை போண்டாமணியின் மருத்துவ சிகிச்சைக்காக அளித்தார் என்று தகவல் பரவியது. போண்டாமணியும் இதுகுறித்து ஒரு வீடியோ வெளியிட்டு அதை உறுதி செய்தார்.
இதைத் தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷும் போண்டாமணியின் சிகிச்சைக்காக ஒரு லட்சம் ரூபாயை கொடுத்து உதவியுள்ளார்.
இதுகுறித்து நிகழ்ந்து போய் வீடியோ வெளியிட்டுள்ள போண்டாமணி, “தனுஷ் சார் நீங்கள் கொடுத்தனுப்பிய ஒரு லட்ச ரூபாய் எனக்கு கிடைத்தது இந்த சமயத்தில் அது எவ்வளவு பெரிய உதவி என்பது எனக்கு தெரியும்.. ரொம்ப நன்றி சார்” என கூறியுள்ளார்