சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஒய் ஜி மகேந்திரன் கதாநாயகனாக நடித்த உருவங்கள் மாறலாம் என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் எஸ்வி ரமணன். இவர் அடிப்படையில் ஒரு இசையமைப்பாளரும் கூட.
எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதி இயக்கிய யாருக்காக அழுதான் என்கிற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். இன்று காலை இவர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 87. திரையுலகைச் சேர்ந்த பலரும் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
இவர் தமிழ் சினிமாவில் 1930-களில் புகழ்பெற்று விளங்கிய இயக்குனர் கே சுப்பிரமணியத்தின் மகன்.. இவரது இரண்டு மகள்களான லட்சுமி, சரஸ்வதி இருவரில் லட்சுமியின் மகன்தான் இன்று பிரபல இசை அமைப்பாளராக வலம்வரும் அனிருத் என்பது குறிப்பிடத்தக்கது..
இசையமைப்பாளராக, இயக்குனராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட இவர் வானொலி விளம்பரங்களில் பல புதுமைகளை புகுத்தினார். அதுமட்டுமில்ல ரமணமகரிஷி, சீரடி சாய்பாபா போன்றவர்களைப் பற்றிய ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார்.