பொதுவாகவே நம் தமிழ் சினிமா நடிகர்களுக்கு உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் உடன் ஒரு காட்சியிலாவது நடித்துவிட மாட்டோமா என்கிற ஏக்கமும் கனவும் இருக்கவே செய்யும். அது முன்னணி ஹீரோக்களுக்கு மட்டுமல்ல, குணச்சித்திர நடிகருக்கும் கூட இருக்கும் ஒரு ஆசை தான்.
அந்த வகையில் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் வரலாற்றுப் படமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் கதாநாயகியாக நந்தினி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.

இந்த படத்தில் நாயகர்கள் மூன்று பேர், கதாநாயகிகள் இரண்டு பேர் என இவர்களைத் தவிர்த்து படத்தில் துணை கதாபாத்திரங்களாக நிறைய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அதில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் சரத்குமாரும் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் பார்த்திபனும் நடித்துள்ளனர்.

பார்த்திபன் சாதாரணமாகவே சக நடிகைகளை கவிதையாக வர்ணிப்பதில் வித்தகர். ஐஸ்வர்யாராயே அவருடன் நடித்து இருக்கும்போது அவர் வர்ணிக்காமல் விடுவாரா என்ன ?
அந்த வகையில் படப்பிடிப்பின்போது ஐஸ்வர்யாராயுடன் தானும் சரத்குமாரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை எல்லாம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் பார்த்திபன்.

அப்படியே ஐஸ்வர்யா ராய் பற்றி வர்ணிக்கும்போது, ‘ஐஸ் வாரியம் ! கற்றுக் கொள்ள….
காற்று கொள்ளும் மூங்கில் துளைகளில் இருந்து இசை வரும் என கோடியாய் கொட்டிக் கிடக்கின்றது இப்பூமியில்.அப்படி இப்பெண்ணிடமிருந்து…

தாயானப் பிறகும்,தான் விரும்பும் கலையை தொடர,ஆரோக்கியத்தை+அழகை காத்திட கடும் முயற்சியும்,விடா பயிற்சியும் செய்கிறார்.

அழகு என நான் காண்பது பிறை நிலவு வானில் இருந்து மறையும் முன்னே முழுநிலவாய் படப்பிடிப்புத் தளத்தில் நுழைபவர் வசனங்களை அனைவரும் புன்னகை உட்பட மனப்பாடம் செய்து ஒன்மோர் கேட்கா ஈகோவுடன் தயாராகி விட்டு பின் அனைவரிடமும் அன்பாக பழகுகிறார் என குறிப்பிட்டுள்ளார் பார்த்திபன்