இதுவரை தமிழ் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நடிகர் விஜய் முதல்முறையாக தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு மட்டுமல்லாது தமிழ் என இருமொழியில் உருவாகும் இந்த படத்தை இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக முதன்முறையாக விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார். மற்றும் முக்கிய வேடங்களில் பிரபு, சரத்குமார், குஷ்பு, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் சார்பில் தயாராகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த நிலையில் இந்த படம் உறுதியாக 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது என்கிற அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மேலும் ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெறுகிறது என்றும் அறிவித்துள்ளது.. இதில் இரண்டு பாடல் காட்சிகளும் இரண்டு சண்டைக் காட்சிகளும் படமாக்கப்பட உள்ளன என்கிற கூடுதல் விவரங்களையும் தற்போது தெரிவித்துள்ளனர்.